ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்!
ADDED : 21 minutes ago
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் 'ஜெயிலர்'. ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் இடம்பெற்ற ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, சிவராஜ் குமார், மோகன்லால் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்கள் அல்லாமல் இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, பாலிவுட் நடிகை வித்யா பாலன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இப்போது முதற்கட்டமாக இந்த படத்திலிருந்து ஒரு சிறப்பு கிளிம்ஸ் வீடியோ வருகின்ற டிசம்பர் 12ம் தேதியன்று ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர் என கூறப்படுகிறது.