மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்!
ADDED : 7 minutes ago
நடிகர் மகத் ராகவேந்திரா ‛மங்காத்தா, ஜில்லா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' ஆகிய படங்களில் ஒரு முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் இவர் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். ஆனால், இவர் நடித்த படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை.
தற்போது ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மகத் ராகவேந்திரா ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கின்றார். ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கின்றார். டிசம்பர் இரண்டாம் வாரத்தில் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாகிறது.