உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன்

'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன்

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் 'மேட் இன் கொரியா'. 'நித்தனம் ஒரு வானம்' படத்தை இயக்கிய கார்த்திக் இயக்கி உள்ளார். பிரியங்கா மோகன் சோலோ ஹீரோயினாக நடித்துள்ளார். கொரியாவை சுற்றிப் பார்க்கச் செல்லும் ஒரு தமிழ் பெண் அங்கு சந்திக்கும் பிரச்னைகள்தான் கதை. வருகிற 12ம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

படத்தின் அறிமுக விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட பிரியங்கா மோகன் படம் பற்றி கூறும்போது “மேட் இன் கொரியா' படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்னால் கொரியன் டிராமா பார்த்துது, சில வார்த்தைகள் கற்றுக் கொண்டு தயாரானேன். இயக்குநர் கார்த்திக் கொடுத்த இன்புட்ஸூம் உதவியாக இருந்தது.

கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் அங்கு படமாக்கினோம். கணிக்க முடியாத காலநிலைதான் அங்கு பெரும் சவாலாக இருந்தது. காலையில் படப்பிடிப்பிற்கு செண்பாவாக (படத்தின் கேரக்டர்) சென்று மாலையில் செண்பாவாக திரும்புவேன்.

நாங்கள் அங்கு சென்று கொரிய வார்த்தைகள் நிறைய கற்றுக் கொண்டது போல, 'தளபதி' படத்தின் சுந்தரி பாடலையும் நிறைய தமிழ் வார்த்தைகளையும் அங்குள்ளவர்களுக்கு சொல்லி கொடுத்திருக்கிறோம்.

இயக்குநரின் மனைவி கொரியன் டிராமா ரசிகை. அவரை இன்ஸ்பிரேஷனாக வைத்துதான் இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறார். செண்பா தன்னை யார் என்று கண்டுபிடிப்பதுதான் படத்தின் கதை” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !