உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர்

இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர்

தமிழ் திரையிசையில் வேகமாக வளர்ந்து வரும் இளம் இசை அமைப்பாளர் சாய் அபயங்கர். தற்போது 'பவழமல்லி' என்ற இசை ஆல்பத்தை உருவாக்கி உள்ளார். இதனை திங்க் மியூசிக் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் வெளியீட்டு விழா நடந்தது.

இதில் சாய் அபயங்கர் பேசியதாவது: நான் 45 வினாடிகள் மட்டுமே ஸ்கிராட்ச் இசையை இசைத்துக் காட்டினேன்; உடனடியாக மகேஷ் அதனை பவழமல்லி ஆல்பமாக கொண்டு வந்து விட்டார்.

எனது இசை அமைப்பில் 'கருப்பு' திரைப்படம் உலகளவில் ஏப்ரல் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. தனுஷின் 55வது படத்திற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. அல்லு அர்ஜூன், அட்லீ இணையும் திரைப்படத்திற்கும் இசையமைக்கிறேன்.

நான் நடிக்க போவதாக கூறுகிறார்கள். இன்று இங்கு கூடியிருக்கும் அனைவரும் எனது இசைக்காகவே வந்துள்ளனர்; அது எனக்கு எல்லாவற்றையும் அர்த்தப்படுத்துகிறது. நான் தொடர்ந்து கடின உழைப்பை செலுத்தி, சிறந்த இசையை வழங்குவதில் கவனம் செலுத்த விரும்புகிறேன்.

இன்று கலைஞர்கள் தங்கள் திறனை காட்ட பல தளங்கள் உள்ளன. அதே சமயம், நாம் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். எனது பெற்றோருக்கு தொடர்ச்சியான உத்வேகமாக இருந்ததற்கு நன்றி; எனது வழிகாட்டிகளுக்கு வழிகாட்டியதற்கு நன்றி; அனைத்து இசை ஸ்ட்ரீமிங் தளங்களுக்கும் அவர்களின் ஆதரவுக்கும் நன்றி. என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !