வாசகர்கள் கருத்துகள் (1)
மசாலா பொடி கம்பெனி எழுத்துக்கள் ஆங்கிலத்தில் உள்ளது என்று போராட்டம் நடத்திய சீமான் முழுவதுமே ஆங்கிலத்தில் உள்ள பட டைட்டிலில் நடிப்பது நகைப்பிற்குரியது
டியூட் படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (சுருக்கமாக ‛எல்ஐகே'). இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள நிலையில், எஸ்.ஜே. சூர்யா, நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் டிசம்பர் 18ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது இந்த எல்ஐகே படத்தின் ‛பட்டுமா' என்ற செகண்ட் சிங்கிள் பாடல் நவம்பர் 27ம் தேதி மாலை 6:00 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது.
மசாலா பொடி கம்பெனி எழுத்துக்கள் ஆங்கிலத்தில் உள்ளது என்று போராட்டம் நடத்திய சீமான் முழுவதுமே ஆங்கிலத்தில் உள்ள பட டைட்டிலில் நடிப்பது நகைப்பிற்குரியது