ஜிவி பிரகாஷின் 'அன்புடன் மகி'
ADDED : 20 minutes ago
ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்திற்கு ‛அன்புடன் மகி' என பெயரிட்டு முதல் பார்வை போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இதில் நாயகியாக ‛ஜோ' பட புகழ் மாளவிகா மனோஜ் நடிக்கிறார். ‛ஜோ' இயக்குனர் ஹரிஹரன் ராம் தான் இந்த படத்தை இயக்குகிறார். லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையும் அமைக்கிறார்.
கிரிக்கெட் விளையாட்டை பின்னணியாக வைத்து பீல்குட் காதல் திரைப்படமாக இது உருவாகிறது. தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 2027ம் ஆண்டு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். அனேகமாக காதலர் தினத்தையொட்டி படம் வெளியாக வாய்ப்புள்ளது.