உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிரஞ்சீவியுடன் தெலுங்கில் சிறப்புப் பாடலுக்கு நடனமாடிய ரித்திகா சிங்!

சிரஞ்சீவியுடன் தெலுங்கில் சிறப்புப் பாடலுக்கு நடனமாடிய ரித்திகா சிங்!

தமிழில் மாதவன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கிய 'இறுதிச்சுற்று' படத்தில் அறிமுகமானவர் ரித்திகா சிங். அதன்பிறகு 'ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே, வேட்டையன்' ஆகிய தமிழ் படங்களில் நடித்தார்.

வெங்கடேஷ் நடித்த 'குரு' என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான ரித்திகா சிங், பின்னர் 'நீவெவரோ' படத்திலும் நடித்திருந்தார். சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மூலமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அவரது இந்தக் கவர்ச்சியான தோற்றம் தற்போது சிறப்பு நடனப் பாடல்களில் தோன்றும் வாய்ப்புகளை அவருக்குப் பெற்றுத் தந்துள்ளது. ஏற்கனவே மலையாள படம் ஒன்றில் சிறப்புப் பாடலுக்கு நடனமாடியதைத் தொடர்ந்து, தற்போது பாபி இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்து வரும் 'காக' என்ற படத்தின் மூலம் தெலுங்கிலும் சிறப்புப் பாடல் நடனக் கலைஞராக அறிமுகமாகிறார்.

தமன் இசையமைத்துள்ள இந்தச் சிறப்புப் பாடலுக்கான படப்பிடிப்பை சமீபத்தில் நிறைவு செய்துள்ளார் ரித்திகா சிங். பிரமாண்டமான அரங்கில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் பாடலில், சிரஞ்சீவியுடன் இணைந்து ரித்திகா நடனமாடியுள்ளார். இந்தச் சிறப்புப் பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, தெலுங்கு சினிமாவில் இதுபோன்ற சிறப்புப் பாடல்களில் நடிப்பதற்கான கூடுதல் வாய்ப்புகளைத் தனக்குத் திறந்துவிடும் என ரித்திகா நம்பிக்கையுடன் உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !