உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்!

அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்!


‛கல்கி 2898 ஏடி, சன் ஆப் சர்தார் -2' படங்களுக்கு பிறகு தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் அட்லி இயக்கி வரும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் மிருணாள் தாக்கூர். இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், தான் புதிதாக பென்ஸ் கார் வாங்கி இருப்பதாக கூறியுள்ளார். அதற்கான காரணம் குறித்து அவர் கூறுகையில், ‛‛நாங்கள் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எங்களது குடும்பத்தில் உள்ள சிலர் கார் வைத்திருக்கிறார்கள். அதில் ஒருவர், எனது அம்மாவை தனது காரில் ஏற்ற மறுத்தார். இது எங்களுக்கு மிகப்பெரிய அவமானம் ஆகிவிட்டது.

அதனால் கண்டிப்பாக நாமும் ஒருநாள் சொந்தமாக கார் வாங்கி அதில் என் அம்மாவை உட்கார வைத்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதன்படி இப்போது நான் பென்ஸ் கார் வாங்கி இருக்கிறேன். எங்கள் குடும்பத்திலேயே நாங்கள் மட்டும் தான் பென்ஸ் கார் வைத்திருக்கிறோம். இந்த காரில் என் அம்மாவை அமர வைத்து நான் பெருமையாக ஓட்டி செல்கிறேன்'' என்று தெரிவித்திருக்கிறார் மிருணாள் தாக்கூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !