‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி!
ADDED : 3 minutes ago
‛அனிமல்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் 'ஸ்பிரிட்' எனும் படத்தில் கதாநாயகனாக நடிக்கின்றார். இந்த படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்கிறார். இதில் கதாநாயகியாக த்ரிப்தி டிம்ரி நடிக்கின்றார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், விவேக் ஓபராய், காஞ்சனா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை இன்று பூஜை நிகழ்வுடன் துவங்கியுள்ளனர். மேலும், இந்த பூஜை விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிரஞ்சீவி கலந்து கொண்டு தொடங்கி வைத்துள்ளார்.