உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: வரதட்சணை கொடுமைக்கு எதிரான முதல் படம்

பிளாஷ்பேக்: வரதட்சணை கொடுமைக்கு எதிரான முதல் படம்


பெண்களுக்கு எதிரான பெரும் கொடுமை வரதட்சணை. பெண்கள் படித்து முன்னேறி வேலைக்கு செல்வதால் தற்போது வரதட்சணை சற்று குறைந்திருக்கிறது.

ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரதட்சணை கோர தாண்டவம் ஆடியது. விதவை மறுமணம், பெண் விடுதலை, மதுவின் கொடுமை, அரசியல் என பல சமூக கருத்துக்களுடன் படங்கள் வெளிவந்த காலத்தில் வரட்சணை கொடுமை பற்றி ஆங்காங்கே சில காட்சிகளாக வைக்கப்பட்டுள்ளது.என்றாலும் வரதட்சணைக்கு எதிரான முதல் முழுநீள படம் என்று 'கோடீஸ்வரன்' படத்தை சினிமா வரலாற்று ஆர்வலர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மராத்தி எழுத்தாளர் பி.பி.வார்க்கரர் எழுதிய 'ஹாச் முல்ச்சா பாப்' என்ற நாவல்தான் இந்த படத்தின் கதை. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் இது திரைப்படமாகி உள்ளது. நாடகமாகவும் நடத்தப்பட்டு வந்தது. தமிழில் இந்த கதையை கோடீஸ்வரன் என்ற பெயரில் சுந்தர்ராவ் நட்கர்ணி இயக்கினார்.

சிவாஜி, பத்மினி, ராகினி, வீணை பாலச்சந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். எஸ்.வி.வெங்கட்ராமன் இசை அமைத்திருந்தார். சிவாஜியும், வீணை எஸ்.பாலச்சந்தரும் நண்பர்கள் இருவரும் நகரத்தில் படித்து விட்டு தங்கள் கிராமத்துக்கு திரும்புகிறார்கள். அப்போது தங்கள் கிராமத்தில் நிலவும் வரதட்சணை கொடுமையை கண்டு கோபம் கொள்கிறார்கள். குறிப்பாக வரதட்சணை கொடுமையால் தன் மகள்களான பத்மினி, ராகினிக்கு திருமணம் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள் பெற்றோர்கள்.

நண்பர்கள் இருவரும் பத்மினி, ராகினியை கொண்டே எப்படி வரதட்சணை வழக்கத்தை ஒழிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. படம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் இடம்பெற்ற வரதட்சணைக்கு எதிரான தஞ்சை ராமய்யா தாசின் வசனங்கள் அப்போது பிரபலமாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !