உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தாஷமக்கான் தலைப்புக்கு என்ன அர்த்தம்

தாஷமக்கான் தலைப்புக்கு என்ன அர்த்தம்

ஹரிஷ் கல்யாண், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகி வரும் படத்துக்கு ‛தாஷமக்கான்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வினீத் வரபிரசாத் இயக்குகிறார். இதென்ன தலைப்பு. இதற்கு என்ன அர்த்தம் என புரியாமல் பலர் தவிக்க, ஹீரோவே அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

''சென்னையில் உள்ள பிரபலமான ஏரியா தாஷமக்கான். வட சென்னையில் சென்ட்ரலுக்குபின், புரசைவாக்கம் அருகே உள்ளது. இந்த ஏரியாவில் இருந்துதான் சென்னை மற்றும் பல ஏரியாக்களுக்கு இறைச்சி சப்ளை ஆகிறது. அசைவ உணவுகளுக்கு இந்த ஏரியா அவ்வளவு புகழ் பெற்றது. தவிர, வேறு சில தனி அடையாளங்களும் உண்டு. கதைப்படி, நான் ராப் பாடகராக வருகிறேன். தாஷமக்கான் ஏரியாவில் என்ன நடக்கிறது என்ற பின்னணியில் ஆக் ஷன் கலந்து கதை உருவாக்கி உள்ளோம். லிப்ட் படத்தை இயக்கிய வினீத்வரபிரசாத், நிறைய ஆராய்ச்சி செய்து இந்த படத்தை இயக்கியுள்ளார்.

சத்யராஜ் , சுனில் போன்ற சீனியர் நடிகர்களுடன் இதில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். தமிழில் இப்போது ராப் பாடல்கள் பிரபலமாகி வருகின்றன. இந்த படத்தில் ஏகப்பட்ட நிஜ ராப் பாடகர்கள் நடித்து இருக்கிறார்கள். ப்ரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார். பலரும் நடிக்க தயங்கிய ரோல் இது, முதலில் நான் இதற்கு செட் ஆவேனா என்று பலர் சந்தேகப்பட, நான் தைரியமாக நடித்துள்ளேன்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !