உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பொங்கல் போட்டியில் 2 படங்கள் மட்டுமா?

பொங்கல் போட்டியில் 2 படங்கள் மட்டுமா?

தீபாவளி, பொங்கலுக்கு முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள், அதிக எண்ணிக்கையிலான படங்கள் ரிலீஸ் ஆவது வாடிக்கை. இந்த தீபாவளிக்கு முன்னணி ஸ்டார் படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. துருவின் பைசன், பிரதீப் ரங்கநாதனின் டியூட், ஹரிஷ் கல்யாணின் டீசல் படங்கள் வெளியாகின. இதில் பைசன், டியூட் வெற்றி பெற்றது. வரும் பொங்கலுக்கு அதிக எண்ணிக்கையிலான படங்கள் ரிலீஸ் ஆகும்.

முன்னணி நடிகர்களின் பல படங்கள் வெளியாகலாம் என கூறப்பட்டது. ஆனால், பொங்கலுக்கு விஜய் நடித்த ஜனநாயகன், சிவகார்த்திகேயனின் பராசக்தி மட்டுமே ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. இரண்டுமே பெரிய பட்ஜெட் படங்கள். ஆகவே அதிக தியேட்டரில் ரிலீஸ் ஆக வாய்ப்பு. மற்ற சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைக்காது என்று கூறப்படுவதால் பொங்கலுக்கு தங்கள் படத்தை ரிலீஸ் செய்ய பலரும் யோசிக்கிறார்களாம்.

சூர்யாவின் கருப்பு பொங்கல் போட்டியில் இருந்து விலகிவிட்டது. ஜனநாயகன் படத்தின் தமிழக ஏரியா உரிமை மட்டும் 105 கோடிக்கு விலை போய் உள்ளது. சிவகார்த்திகேயன் படங்களில் பராசக்தி ப்ரீ ரிலீஸ் வியாபாரத்தில் புது சாதனை படைக்கும் என்று கூறப்படுகிறது. இவர்கள் போட்டியில் நாம் சிக்க வேண்டாம் என்று பலரும் விரும்புவதால், பொங்கலுக்கு 2 படங்கள் மட்டுமே போட்டி என்று கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !