உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தினம் ஒரு பிகினி - இலியானா திட்டம் ?

தினம் ஒரு பிகினி - இலியானா திட்டம் ?

தமிழில் விஜய் ஜோடியாக 'நண்பன்' படத்தில் நடித்தவர் இலியானா. தெலுங்கு, ஹிந்தியில் சில சூப்பர் ஹிட் படங்களில் கதாநாயகியாக நடித்தவர். இப்போது இரண்டு ஹிந்திப் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

பாலிவுட், கோலிவுட், டோலிவுட் நடிகைகளின் தற்போதைய முக்கிய சுற்றுலா தலமான மாலத்தீவிற்குச் சென்றுள்ளார் இலியானா. மாலத்தீவு சுற்றுலா என்றாலே அங்கு செல்லும் நடிகைகள் விதவிதமான புகைப்படங்களைப் பதிவிடுவது வழக்கம். ஒரு சிலர் பிகினி புகைப்படங்களை கண்டிப்பா வெளியிடுவார்கள். அந்த வரிசையில் நேற்று இலியானா சிவப்பு நிற பிகினி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சியூட்டினார்.

இன்று வெள்ளை நிற பிகினி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இன்னும் அதிகமாக அதிர்ச்சியூட்டி உள்ளார். நேற்று வெளியிட்ட புகைப்படம், வீடியோவை விட இன்று வெளியிட்டுள்ள புகைப்படம், வீடியோ மிகவும் கவர்ச்சியாக உள்ளது. மாலத் தீவு சுற்றுலா முடியும் வரை 'தினம் ஒரு பிகினி' என திட்டம் வைத்திருக்கிறாரோ ?.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !