ராதே ஷ்யாம் 2வது பாடல் வெளியீடு
ADDED : 1431 days ago
ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்துள்ள படம் ராதே ஷ்யாம். ஜனவரி 14ந்தேதி திரைக்கு வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சீனா, ஜப்பான் என பல மொழிகளில் வெளியாக உள்ளது. தற்போது படத்தின் புரொமோசன் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் நேற்று ராதே ஷ்யாம் படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டாவது பாடலை வெளியிட்டனர். தமிழில் தூரிகை தூரிகை என்று தொடங்கும் டூயட் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. பிரபாஸ் - பூஜா ஹேக்டே நடித்துள்ள இந்த பாடலுக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, மதன் கார்க்கி பாடலை எழுதியிருக்கிறார். சித்ஸ்ரீராம் பாடலை பாடியிருக்கிறார்.