மேலும் செய்திகள்
பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா
1374 days ago
செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!
1374 days ago
கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்!
1374 days ago
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து நவம்பர் 25ந்தேதி திரைக்கு வந்துள்ள மாநாடு படம் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டி ருக்கும் நிலையில் சமூகவலைதளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார் வெங்கட்பிரபு. அப்போது மாநாடு படத்தை வெற்றிப்படமாக்கியதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த வில்லன் வேடத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் ரவிதேஜாவிடமும் பேசினோம். அவர் வேறு படங்களில் பிசியாக இருந்ததால் எஸ்.ஜே.சூர்யாவை நடிக்க வைத்தோம். தற்போது மாநாடு படத்தை பார்த்துள்ள ரவிதேஜா தெலுங்கில் இந்த படத்தை ரீ மேக் செய்தால் வில்லனாக நான் தான் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.
மாநாடு படத்தின் இறுதியில் மீண்டும் சிம்புவிற்கு டைம் லூப் வருவது போல் வைத்துள்ளோம். அப்படி சிம்புவிற்கு வரும்போது எஸ்.ஜே.சூர்யாவிற்கான காட்சிகளும் மீண்டும் வரும் என்று தெரிவித்துள்ள வெங்கட்பிரபு கூடிய சீக்கிரமே மாநாடு 2விற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
1374 days ago
1374 days ago
1374 days ago