உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஸ்டார் சேனலுக்கு குட் பை சொன்ன பாவனா?

ஸ்டார் சேனலுக்கு குட் பை சொன்ன பாவனா?

பிரபல சின்னத்திரை தொகுப்பாளினியான பாவனா இனி விஜய் டிவி நிகழ்ச்சிகளில் வர வாய்ப்பில்லை என கூறியுள்ளார். தமிழ் சின்னத்திரை தொகுப்பாளினிகளில் முக்கிய நபர்களில் ஒருவர் பாவனா. விஜய் டிவியின் பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த அவர், தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் கிரிக்கெட் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார். அவர் நீண்ட நாட்களாக விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்காததால் அவரது ரசிகர்கள் மீண்டும் விஜய் டிவிக்கு வருவீர்களா என கேள்விகள் எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், 'இனி விஜய் டிவிக்கு வர வாய்ப்பில்லை' கூறியுள்ளார்.

இது ஒருபுறமிருக்க, பாவனா தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் வெசஸ் டான்ஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !