டிசம்பரில் தமிழரசன் ரிலீஸ் : சுரேஷ்கோபி தகவல்
சமீபத்தில் சுரேஷ் கோபி மலையாளத்தில் நடித்த காவல் என்கிற படம் வெளியானது.. இந்தநிலையில் தற்போது ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் தமிழுக்கு வந்துள்ள சுரேஷ்கோபி, விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்துள்ள 'தமிழரசன் படம் அடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 'ஜெயம் ரவியை வைத்து தாஸ் என்கிற படத்தை இயக்கிய பாபு யோகேஸ்வரன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடிக்கிறார்.
தற்போது இந்தப்படத்தில் தனக்கான டப்பிங்கை தானே பேசி வருகிறார் சுரேஷ்கோபி. மேலும் இந்தப்படம் வரும் டிசம்பரில் வெளியாக இருக்கிறது என்கிற தகவலையும் அவர் தெரிவித்துள்ளார். அதிரடி போலீஸ் கதையாக உருவாகி வரும் இந்தப்படத்தில் நெகடிவ் சாயல் கொண்ட டாக்டர் வேடத்தில் நடித்திருக்கிறாராம் சுரேஷ்கோபி. கடந்த 2015ல் ஷங்கர் டைரக்சனில் 'ஐ' படத்தில் கூட இதேபோன்ற ஒரு டாக்டர் வேடத்தில் தான் வில்லனாக சுரேஷ்கோபி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..