உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என் மகளுக்கு ஆதரவு தாருங்கள் : ஜீவிதா வேண்டுகோள்

என் மகளுக்கு ஆதரவு தாருங்கள் : ஜீவிதா வேண்டுகோள்

இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதி, இயக்கும் படம் ஆனந்தம் விளையாடும் வீடு. ஶ்ரீ வாரி பிலிம் சார்பில் பி.ரங்கநாதன் தயாரிக்கிறார். சித்து குமார் இசையமைக்க, போராபரணி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சேரன், சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்ட ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜொம்மல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தராஜன், மௌனிகா, மைனா, பருத்திவீரன் சுஜாதா, பிரியங்கா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் மூலம் நடிகர் டாக்டர் ராஜசேகர் - நடிகை ஜீவிதா தம்பதிகளின் மகள் ஷிவத்மிகா ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஜீவிதா பேசியதாவது: இத்தனை வருடங்கள் கழித்து உங்கள் அனைவரையும் சந்திப்பது மகிழ்ச்சி. என் இரண்டு மகள்களும் படத்தில் நடிக்கிறார்கள். அவர்களுக்கு பிடித்த வேலையை செய்கிறார்கள். என் இளைய மகள் இப்படத்தில் அறிமுகமாகிறார் அவளுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள். படப்பிடிப்பில் அனைவரும் அவளை நன்றாக பார்த்து கொண்டதாக சொன்னாள் இந்தப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும். என்றார்.

நாயகி ஷிவத்மிகா ராஜசேகர் பேசியதாவது: இது எனது முதல் படம், எனக்கு தமிழ் நன்றாகவே பேச வரும், இங்கு வந்தவுடன் பயம் வந்துவிட்டது. இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த இயக்குனர், தயாரிப்பாளருக்கு நன்றி. முதல் படத்திலேயே சேரனுடன் நடிப்பது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் அனைவரும் என்னை நன்றாக பார்த்துக் கொண்டார்கள் படம் உங்களுக்கு பிடிக்கும். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !