உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நயன்தாராவின் கோல்ட் படப்பிடிப்பு நிறைவு

நயன்தாராவின் கோல்ட் படப்பிடிப்பு நிறைவு

நேரம், பிரேமம் படங்களை இயக்கிய பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் தற்போது இயக்கி வரும் படம் கோல்ட். இதில் நயன்தாராவும், பிருத்விராஜும் நடிக்கிறார்கள். பிருத்விராஜ் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

இதுகுறித்து அல்போன்ஸ் புத்திரன் கூறியிருப்பதாவது : கோல்ட் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது எடிட்டிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் நேரம், பிரேமம் போன்றது அல்ல. இது வேறு மாதிரியான படம். சில நல்ல கதாபாத்திரங்கள், நல்ல நடிகர்கள், இரண்டு அல்லது மூன்று பாடல்கள் மற்றும் சிறிது நகைச்சுவையுடன் தயாராகி வருகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !