புதிய கண்ணம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்
ADDED : 1409 days ago
விஜய் டிவி டாப் சீரியலான பாரதி கண்ணம்மாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார் வினுஷா தேவி. முன்னதாக இந்த ரோலில் நடித்து வந்த ரோஷினி தவிர்க்க முடியாத சில காரணங்களால் சீரியலை விட்டு விலகினார். இந்நிலையில் அவருக்கு மாற்றாக நுழைந்திருக்கும் வினுஷா தன்னால் முடிந்த வரை சிறப்பாக நடித்து வருகிறார். ரசிகர்களும் புதிய கண்ணம்மாவை சிறிது சிறிதாக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளனர். தற்போது அவர் தனது 23 பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்க்கும் பலரும், 'புது கண்ணம்மா இவ்ளோ சின்ன பொண்ணா?' என்ற கேள்வியுடன் அவருக்கு வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.