யானை - டப்பிங்கை தொடங்கிய அருண் விஜய்
ADDED : 1400 days ago
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் முதன் முறையாக இணைந்துள்ள படம் யானை. பிரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், சமுத்திரகனி, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தபடத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி, ராமேஸ்வரம், காரைக்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்து முடிந்துள்ள நிலையில், நேற்று முதல் அருண்விஜய் தனக்கான டப்பிங்கை தொடங்கியுள்ளார். இந்நிலையில் அடுத்தபடியாக பிரமோசன் பணிகளை தொடங்க உள்ள டைரக்டர் ஹரி, வருகிற புத்தாண்டு தினத்தில் டீசரை வெளியிட திட்டமிட்டிருக்கிறார். மேலும், யானை படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் படம் திரைக்கு வருகிறது.