ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்!
ADDED : 8 hours ago
ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படம் ‛ஹேப்பி ராஜ்'. மியாண்ட் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் நேற்று வெளியானது. இந்த நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 6:06 மணிக்கு நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்டார். பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ‛லவ் டுடே' படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய மரியா ராஜா இளஞ்செழியன் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். அதோடு, ‛காதல் தேசம்' அப்பாஸ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்த ‛ஹேப்பி ராஜ்' படம் காதல் கதையில் உருவாகிறது.