உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா!

திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா!


நடிகை சமந்தாவும், இயக்குனர் ராஜ் நிடிமொருவும் கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் திருமணம் செய்து கொண்டார்கள். அங்குள்ள லிங்க பைரவி கோவிலில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. அவர்கள் இருவரின் மிக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டார்கள்.

தற்போது திருமணம் நடைபெற்ற மகிழ்ச்சியில் மூழ்கி இருக்கும் சமந்தா, விழாவின் தருணங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். ஏற்கனவே திருமணத்தின் போது எடுக்கப்பட்ட பல புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட சமந்தா, தற்போது திருமணம் செய்து கொண்டதும் தனது தாயார் நினெட் பிரபுவுடன் ஒரு அன்பான உணர்ச்சிபூர்வமான தருணத்தை பகிர்ந்து கொள்ளும் வகையில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் கவனம் பெற்று வருவதோடு அவரை பாலோ செய்யும் அவரது ரசிகர்கள் அவருக்கு திருமண வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள். மேலும் திருமணம் முடிந்த சில தினங்களிலேயே தற்போது தான் தயாரித்து கதையின் நாயகியாக நடித்து வரும் ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளார் சமந்தா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !