புஷ்பா படக்குழுவுக்கு தங்க மோதிரம் பரிசளித்த அல்லு அர்ஜூன்
ADDED : 1401 days ago
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்துள்ள படம் புஷ்பா. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ள இந்தபடத்தில் பகத் பாசில் வில்லனாக நடித்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியள்ள இந்த படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடன மாடியுள்ளார். இதற்கான படப்படிப்பு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த திங்களன்று இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இதையடுத்து புஷ்பா படத்தில் பணியாற்றிய குழுவினர் அனைவருக்கும் தங்க மோதிரத்தை பரிசாக வழங்கியுள்ளார் அல்லு அர்ஜூன்.