திருமண பந்தத்தில் இணைந்த சத்யா தேவரஜான்
ADDED : 1441 days ago
டிவி தொகுப்பாளினி சத்யா தேவராஜன் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். சமூகவலைதளங்களில் போட்டோஷூட், ரீல்ஸ் வீடியோ என பதிவிட்டு ரசிகர்களை அதகளம் செய்து வருகிறார். இந்நிலையில் ரசிகர்கள் யாரும் எதிர்பாராத வகையில் சத்யா தேவராஜனுக்கும், ஆனந்த் என்பவருக்கும் கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. அவருக்கு தற்போது ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சத்யா தேவராஜன் சமீபத்தில் தான் நடிகை அவதாரம் எடுத்தார். அவர் தற்போது 'அருவி' என்ற தொடரிலும், விரைவில் வெளியாகவுள்ள 'எதிர் நீச்சல்' தொடரிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது திருமணம் திடீரென நிகழ்ந்துள்ளதால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளனர். எனினும் சத்யா - ஆனந்த் தம்பதிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.