ஒபாமா உங்களுக்காக : விஜய்சேதுபதியின் கவுரவ தோற்ற படம் 31ம் தேதி வெளிவருகிறது
ADDED : 1406 days ago
விஜய் சேதுபதி கவுரவ தோற்றத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடைசியாக கடைசீல பிரியாணி என்ற படத்தில் நடித்திருந்தார். அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ஒபாமா உங்களுக்காக படம் வருகிற 31ம் தேதி வெளிவருகிறது.
இந்த படத்தில் பிருத்விராஜன், ஜனகராஜ் மற்றும் பூர்ணிஷா, கே.எஸ்.ரவிக்குமார், ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இது இரண்டு டிரைவர்களை மையமாக கொண்ட அரசியல் படம். படத்தின் ஹீரோ ஒரு அமைச்சரின் மகளோடு நட்பு கொள்கிறார். அதனால் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
நானி பாலா இயக்கியுள்ள இந்தப் படத்தை ஜேபிஜே பிலிம்ஸ் சார்பில் எஸ் ஜெயசீலன் தயாரித்துள்ளார். படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.