டாக்டர் ஆனார் ஷங்கர் மகள் அதிதி
ADDED : 1401 days ago
இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஷங்கரும் ஒருவர். இவரது மகள் அதிதி, தமிழ் சினிமாவில் ஹீரோயினாக களமிறங்கி உள்ளார். ‛கொம்பன்' படத்திற்கு பின் மீண்டும் முத்தையா - கார்த்தி கூட்டணியில் உருவாகி வரும் ‛விருமன்' படத்தில் இவர் நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு வளர்ந்து வருகிறது.
டாக்டருக்கு படித்து வந்த அதிதி இப்போது அந்த படிப்பை முடித்துவிட்டார். சென்னையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், அதிதிக்கு டாக்டர் பட்டத்தை வழங்கினார். இதுதொடர்பான போட்டோவையும், தன் குடும்பத்தினர் உடன் இருக்கும் போட்டோவையும் தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார் அதிதி.
நடிகைகள் சாய் பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி ஆகியோரை தொடர்ந்து நடிகை அதிதியும் டாக்டராகி உள்ளார்.