உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!! ஜெனிபர் கொடுத்த சர்ப்ரைஸ்

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!! ஜெனிபர் கொடுத்த சர்ப்ரைஸ்

சின்னத்திரையில் சில நாட்களே நடித்திருந்தாலும் அதிக அளவு ரசிகர்களை ஜெனிபர் பெற்றுவிட்டார் என்றே சொல்லலாம். நடன கலைஞராக வெள்ளித்திரையில் கால்பதித்த ஜெனிபர், சில படங்களில் நடித்தார். ஆனால், பெரிதாக வரவேற்பு இல்லை. அதன்பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் சின்னத்திரையில் கம்பேக் கொடுத்த அவருக்கு, விஜய் டிவியின் பாக்கியலெட்சுமி சீரியல் நல்ல ஒரு புகழை கொடுத்தது.

பிரசவத்தின் காரணமாக சீரியலை விட்டு விலகிய ஜெனிபருக்கு அழகான ஆண் குழந்தை சமீபத்தில் பிறந்தது. இந்நிலையில் அவர் மீண்டும் ஆக்டிவாக சில நாட்கள் என ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில், பிட்டாக இருக்கும் தனது கம்பேக் புகைப்படங்களை ஜெனிபர் வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !