புஷ்பா - தி ரைஸ்; ஆரம்பமே ரூ.250 கோடி வசூல்
ADDED : 1399 days ago
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‛புஷ்பா-தி ரைஸ்' படம் இரண்டு பாகமாக உருவாகியுள்ளது. படத்தில் சமந்தாவின் கவர்ச்சி குத்தாட்டமும் இடம் பெற்றுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் டிச.,17 ல் பன்மொழியில் வெளியாகிறது. படம் வெளியாவதற்கு முன்பாகவே, தியேட்டர், சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமை விற்பனை மூலம் 250 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். இதுதவிர அனைத்து மொழிகளின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையும் அதிக விலைக்கு ஓ.டி.டி., தளம் ஒன்று கைப்பற்றியுள்ளதாம்.