உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குடும்பத்தினர் உடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி

குடும்பத்தினர் உடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த். நேற்று தனது 72வது பிறந்தநாளை குடும்பத்தினர் உடன் கொண்டாடினார். மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, மருமகன் விசாகன், பேரன்கள், அண்ணன் சத்ய நாராயணன் மற்றும் உறவினர் ரவி ராகவேந்திரா உள்ளிட்டோருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.


காலம் மாற மாற மக்களின் ரசனை மாறும் என்பார்கள். ஆனால் ரஜினிகாந்த்தை பொறுத்தவரை ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து ரக மக்களும் இன்னும் அவரை ரசித்து கொண்டே இருக்கிறார்கள். அது தான் ரஜினியின் பலமே. அதனால் தான் இப்போதும் 72வயதில் முன்னணி நடிகராக அவர் வலம் வர காரணம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !