ஆர்ஆர்ஆர் கேரள உரிமையை கைப்பற்றிய விஜய் பட தயாரிப்பாளர்
ADDED : 1392 days ago
பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றியால் ராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் படத்தின் மற்ற மொழி உரிமைகளை வாங்குவதற்கு மிகப்பெரிய போட்டி நிலவியது. ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்ட நட்சத்திர கூட்டணி இணைந்துள்ள இந்தப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் வாங்கியுள்ளது.
இந்தப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் கைப்பற்றியுள்ளார். சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின்போது மேடையிலே அவரை அழைத்து இந்த அறிவிப்பை வெளியிட்டார் இயக்குனர் ராஜமவுலி. விஜய் நடித்த புலி, விக்ரமின் இருமுகன், சாமி-2 ஆகிய படங்களை தயாரித்த ஷிபு தமீன்ஸ், தற்போது விஜய்சேதுபதி இந்தியில் நடித்துவரும் மும்பைகார் படத்தையும் தயாரித்து வருகிறார்.