உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வாத்தி கம்மிங் - 300 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது

வாத்தி கம்மிங் - 300 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான படம் மாஸ்டர். கொரோனா லாக்டவுனுக்கு பிறகு அதிகம் வசூலித்த முதல் தமிழ் படமாக இந்தப் படம் அமைந்தது. இந்த மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் என்ற பாடல் படம் திரைக்கு வருவதற்கு முன்பே இந்திய அளவில் ஹிட் அடித்து இருந்தது.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் இறுதியில் இந்த வாத்தி கம்மிங் பாடல் வீடியோவை யூடியூப்பில் வெளியிட்டார்கள். தற்போது இப்பாடல் வெளியிடப்பட்டு 10 மாதங்களில் 300 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள். அந்த வகையில் விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடல் தென் இந்திய அளவில் மூன்றாம் இடத்தை பிடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கொண்டாடி வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !