இரண்டு வாரத்தில் ஓடிடிக்கு வரும் மரக்காயர்
ADDED : 1391 days ago
பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், பிரபு, அர்ஜுன் உள்பட பலர் நடிப்பில் மலையாளத்தில் உருவான படம் மரைக்காயர் அரபிக்கடலிண்டே சிம்ஹம். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வந்தது. தமிழில் இப்படத்தை எஸ்.தாணு மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்ற பெயரில் வெளியிட்டிருந்தார். கலவையான விமர்சங்களை பெற்ற இந்த படத்தை இரண்டு வாரங்களுக்குள்ளாகவே தற்போது ஓடிடியில் வருகிற டிசம்பர் 17ஆம் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.