உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அன்பறிவ் ஓடிடி தளத்தில் வெளியாவது ஏன்? தயாரிப்பாளர் விளக்கம்

அன்பறிவ் ஓடிடி தளத்தில் வெளியாவது ஏன்? தயாரிப்பாளர் விளக்கம்

செந்தில் தியாகராஜன் , அர்ஜூன் தியாகராஜன் தயாரித்துள்ள படம் அன்பறிவ். ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் அஷ்வின் ராம் இயக்கி உள்ளார். இந்த படம் டிஷ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளிவருகிறது.

இந்த படம் ஓடிடி தளத்தில் வெளிவருவது குறித்து தயாரிப்பாளர் செந்தில் தியாகராஜன் கூறியதாவது: அன்பறிவு திரைப்படத்திற்காக டிஷ்னியுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு திரைப்படத்தை மிகச்சிறந்த முறையில் விளம்பரப்படுத்தி, பரந்த அளவில் மக்களிடம் கொண்டு செல்லும், அதோடு உலகம் முழுவதும் பரந்த பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் என்பதால் ஒடிடியில் வெளியிடுகிறோம்.

இப்படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஒரு நடிகராகவும், இசையமைப்பாளராகவும் அற்புதமான பணியினை செய்துள்ளார். இயக்குனர் அஸ்வின் ராம் ஒரு பிரம்மாண்டமான படைப்பாக இப்படத்தை இயக்கியுள்ளார். நம் மண் சார்ந்த கலாச்சாரம், குடும்ப உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட இந்தப் படத்தை குடும்ப பார்வையாளர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !