நண்பர்களுக்காக லத்தியை சுழற்றும் விஷால்
ADDED : 1390 days ago
விஷாலின் நெருக்கமான நண்பர்கள் ரமாணாவும், நந்தாவும். இவர்களுக்காக ஒரு படத்தில் நடித்துக் கொடுக்கிறார் விஷால். படத்திற்கு லத்தி சார்ஜ் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் வினோத்குமர் இயக்குகிறார். சாம் சி.எஸ் இசையமைக்கிறார், பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். சுனைனா ஹீரோயின்.
இந்த படத்தின் பணிகள் இப்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்களுக்கு முன் நிறைவடைந்தது. விரைவில் 3வது கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்க உள்ளது. அங்கு கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. பீட்டர் ஹெய்ன் சண்டை காட்சிகளை இயக்குகிறார்.