மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு!
அஜித் குமார், அர்ஜுன், திரிஷா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் 'மங்காத்தா'. வெங்கட் பிரபு இயக்கிய இந்த படம் கடந்த 2011ம் ஆண்டு வெளியானது. 24 கோடியில் உருவான இந்த படம் 68 கோடி வசூலித்தது. இந்த நிலையில் இந்தப் படம் ரீரிலீஸ் ஆகப்போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்த நிலையில் தற்போது இப்படம் ஜனவரி 23ம் தேதி மீண்டும் தியேட்டருக்கு வரப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு சில தினங்களுக்கு முன்பு மங்காத்தா படத்தின் டிரைலரையும் படக்குழு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் இப்படத்தின் இயக்குனரான வெங்கட் பிரபு, மங்காத்தா படப்பிடிப்பின் போது அஜித்துடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். மேலும் இதையடுத்து பிப்ரவரி மாதம் அஜித் -ஷாலினி நடித்துள்ள அமர்க்களம் படமும் ரீ ரிலீசாக உள்ளது.