ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்!
ADDED : 8 minutes ago
ஹிந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ராஞ்ஜனா, அட்ராங்கிரே படங்களுக்கு பிறகு தனுஷ் நடித்துள்ள படம் தேரே இஸ்க் மெய்ன். அவருக்கு ஜோடியாக கிருத்தி சனோன் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கடந்த நவம்பர் 28ஆம் தேதி திரைக்கு வந்த இந்த படம் 160 கோடி வசூலித்தது. காதல் கதையில் உருவான இந்த படம் தியேட்டரில் ஓடி முடித்துள்ள நிலையில் வருகிற ஜனவரி 23ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. மேலும் இந்த படத்தை அடுத்து மீண்டும் அதே ஆனந்த் எல்.ராய் இயக்கும் ஒரு மெகா ஆக்சன் படத்தில் அடுத்து நடிக்கப் போகிறார் தனுஷ்.