உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தெருக்கூத்து கலைஞனாக மாறிய விஜய்சேதுபதி

தெருக்கூத்து கலைஞனாக மாறிய விஜய்சேதுபதி

வித்தியாசமான வேடங்களில் தோன்றுவது, நடிப்பது என்றால் அது விஜய் சேதுபதிக்கு பிடித்தமான ஒன்று. சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்தார். அனபெல் சேதுபதி படத்தில் ஜமீன்தாராக நடித்தார், மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்தார். ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் காட்டுவாசியாக நடித்தார். லாபத்தில் நாடோடியாக நடித்தார்.

இந்த நிலையில் தற்போது தெருக்கூத்து கலைஞனாக மாறி உள்ளார். தெருக்கூத்து கலைஞன் வேடமிட்டு ஆடும் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். எல்.ராமசந்திரன் என்ற புகைப்பட கலைஞரின் போட்டோ ஷூட் நிகழ்வில் எடுக்கப்பட்ட வீடியோ. இது குறித்து விபரங்கள் எதுவும் தெரிவிக்கப்பட்டவில்லை. இது காலண்டருக்கான போட்டோ ஷூட் என்றும், அவர் நடிக்க இருக்கிற ஒரு படத்துக்கான போட்டோ ஷூட் என்றும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !