உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கதிருக்கு ஜோடியாக நடிக்கும் பேச்சிலர் திவ்யபாரதி

கதிருக்கு ஜோடியாக நடிக்கும் பேச்சிலர் திவ்யபாரதி

கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் இஷ்க். தற்போது தமிழில் ரீமேக்காகும் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் கதிர். ஷிவ் மோகா என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். சமீபத்தில் வெளியான பேச்சிலர் படத்தில் ஜி.வி.பிரகாஷின் ஜோடியாக நடித்த திவ்யபாரதி இந்தப்படத்தில் கதிருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தின் ஒரிஜினலில் நாயகியாக நடித்த ஆன் ஷீத்தல் தான் தமிழிலும் நடிப்பார் என சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த வாய்ப்பு திவ்ய பாரதிக்கு கைமாறியுள்ளது. காதல் ஜோடி ஒன்றின் காதலில் போலீசாரும் அந்நியர்களின் தலையீடும் குறுக்கிட்டு என்னவெல்லாம் பிரச்சனைகளை அந்த காதலர்கள் சந்திக்கிறார்கள் என்பதுதான். இந்த படத்தின் கதை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !