நடிகருக்கு கொரோனா - படக்குழு கவலை
ADDED : 1380 days ago
புயல் நடிகர் நீண்ட காலம் கழித்து இப்போது தான் சினிமாவில் மீண்டும் காலடி எடுத்து வைத்தார். இசைக்காக லண்டன் சென்றுவந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சையில் சேர்ந்துள்ளார். இதையடுத்து படக்குழு கவலையில் ஆழ்ந்துள்ளதாம்.
இந்த கதை 2 ஆண்டுகளுக்கு முன்பே நடிகரிடம் சொல்லப்பட்ட ஒன்று. இந்த 2 ஆண்டுகளாக கொரோனா பயத்தால் நடிகர் சொந்த ஊரில் இருக்கும் வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. சென்னை பக்கமும் வரவில்லை. கொரோனா ஓய்ந்ததால் தான் வீட்டை விட்டு வெளியே வர தொடங்கினார். இந்நிலையில் படம் தொடங்கும் முன்பே இந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் படக்குழு கவலையில் ஆழ்ந்துள்ளதாம்.