மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
1350 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1350 days ago
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காலை நேரம் ஒளிபரப்பாகி வரும் ஆன்மீக நிகழ்ச்சியான ஓம்காரம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் சசிகலா. தவிர பல சினிமா மேடைகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினியாக பிரபலாமாகியுள்ளார். சின்னத்திரையில் சீரியல்களில் நடிகையாகவும் அறிமுகமான சசிகலா, தற்போது என்றென்றும் புன்னகை என்ற ஜீ தமிழ் சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சசிகலா தற்போது கர்ப்பமாக இருப்பதால் சின்னத்திரையிலிருந்து பிரேக் எடுத்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து அவர் குழந்தையை நலமுடன் பெற்றெடுக்க பலரும் தங்களது வாழ்த்துகளையும் அட்வைஸையும் தெரிவித்து வருகின்றனர்.
சினிமா நடிகர் பிரபாகரனை காதலித்து திருமணம் செய்து கொண்ட சசிகலா, சமீபத்தில் சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் சூழ தனது வளைகாப்பு நிகழ்ச்சியை கோலகலமாக கொண்டாடினார். இந்நிலையில் அவர் பிரசவத்திற்காக பிரேக்கை அறிவித்துள்ளார்.
1350 days ago
1350 days ago