அழகு ராணி - சாயா சிங் லேட்டஸ்ட் போட்டோஸ்
ADDED : 1396 days ago
தமிழ் திரையுலகில் 'திருடா திருடி'படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் சாயா சிங். சினிமாவில் பெரிய ஸ்டாராக ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால், அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இந்நிலையில் ஆனந்தபுரத்து வீடு படத்தில் அவருடன் நடித்த சின்னத்திரை நடிகர் கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் ஒளிபரப்பாகி வரும் 'பூவே உனக்காக' தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் கமிட்டாகி சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார். இதனால் சாயா சிங் ரசிகர்களின் கவனத்தை மீண்டும் கவர்ந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது சமூகவலைதளத்தில் 'ராணி ஜோதா பாய்' போல் கெட்டப் போட்டு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 'இவரை போய் தமிழ் சினிமா மிஸ் பன்னிடுச்சே' என சிலர் ஃபீல் செய்து வருகின்றனர்.