மீண்டும் ஹிந்தி வெப் சீரிஸில் சமந்தா
ADDED : 1381 days ago
ராஜ், டி.கே என்ற இரட்டையர்கள் இணைந்து இயக்கிய தி பேமிலிமேன் வெப்சீரிஸின் இரண்டாம் பாகத்தில் இலங்கைப் பெண்ணாக நடித்திருந்தார் சமந்தா. அந்த தொடர் மிகப் பெரிய விமர்சனங்களை சந்தித்தது. அதோடு அந்த வலை தொடரில் சமந்தா நடித்தது அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்தியது என்றும் செய்திகள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில் நாக சைதன்யாவை பிரிந்த பிறகு புஷ்பா படத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடிய சமந்தா, தற்போது யசோதா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்தபடியாக மீண்டும் ராஜ் மற்றும் டிகே இயக்கும் ஹிந்தி வெப்தொடரில் நடிப்பதற்கு சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார். பாலிவுட் நடிகர் வருண் தவானுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாக பாலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன.