நயன்தாராவின் 'கனெக்ட்' படத்தில் சத்யராஜ்
ADDED : 1622 days ago
நயன்தாராவை வைத்து மாயா படத்தை இயக்கியவர் அஸ்வின் சரவணன். ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நயன்தாராவை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு கனெக்ட் என பெயரிட்டுள்ளனர்.
ஹிந்தி நடிகர் அனுபம் கெர், நடிகர் சத்யராஜ் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். பிரித்வி சந்திரசேகர் இசையமைக்கிறார். நயன்தாராவின் காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். இப்படத்தில் நடிக்கும் சத்யராஜின் தோற்றத்தை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.