ஓடிடி வெளியீட்டில் சாதனை படைத்த தனுஷின் ஹிந்தி படம்
ADDED : 1424 days ago
ஹிந்தியில் ராஞ்ஜனா, ஷமிதாப் படங்களைத் தொடர்ந்து அக்சய்குமாருடன் இணைந்து தனுஷ் நடித்துள்ள படம் அட்ராங்கி ரே. ஆனந்த் எல்.ராய் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது.
அட்ராங்கி ரே படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. தனுஷின் நடிப்புக்கும் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், ஓடிடி தளங்களில் இதுவரை வெளியான படங்களின் முதல் நாளில் அதிகமானோர் பார்க்கப்பட்ட பட வரிசையில் இப்படம் முதலிடம் பிடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.