உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆனந்தம் விளையாடும் வீடு - கமிஷனரிடம் புகார் அளித்த படக்குழு

ஆனந்தம் விளையாடும் வீடு - கமிஷனரிடம் புகார் அளித்த படக்குழு

கவுதம் கார்த்திக், சேரன், சரவணன் உள்பட பலர் நடிப்பில் டிசம்பர் 24-ம் தேதி திரைக்கு வந்துள்ள படம் ஆனந்தம் விளையாடும் வீடு. நந்தா பெரியசாமி இந்த படத்தை இயக்கி இருக்கிறார். குடும்ப உறவுகளை மையப்படுத்தி கதையில் உருவாகியுள்ளன இந்த படம் திரைக்கு வந்த அன்றைய தினமே இணையதளங்கள், டெலிகிராம்களில் சட்டவிரோதமாக வெளியிட்டுள்ளதாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்கள் . அதோடு ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் கதையை வேறு எந்த தனிநபர் , டிஜிட்டல் உரிமை என எதுவும் விற்பனை செய்யப்படவில்லை. அதனால் சோசியல் மீடியாவில் இது போன்று சட்டவிரோதமாக ஆனந்தம் விளையாடும் வீடு படம் வெளியாகி வருவதை தடுத்து நிறுத்த வேண்டுமென்று அந்த புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார்கள் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !