வைரலாகும் சூப்பர் சிங்கர் பிரகதியின் பிகினி புகைப்படங்கள்
ADDED : 1376 days ago
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் பிரகதி குருபிரசாத். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்த அவர், சமீப காலங்களில் திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அவர் ஹாலிவுட்டில் ஒரு வெப்சீரியஸில் மட்டுமே நடித்தார். அதன்பிறகு நடிப்பில் கவனம் செலுத்தவில்லை. தொடர்ந்து தமிழில் சில படங்களில் பாடி உள்ளார்.
சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரகதி அடிக்கடி வைரலாகும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மீண்டும் பிகினி உடையில் இருக்கும் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். செயற்கையான அருவி போன்ற செட்டில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் வைரலாகின.