சந்திப்பை தவிர்த்த சமந்தா நாகசைதன்யா
ADDED : 1381 days ago
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா கடந்த 2018ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்தார். திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வந்தவர், கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு வந்தார். கடந்த சில மாதங்களாகவே சமந்தாவின் விவாகரத்து செய்தி பரவிய நிலையில் பின்னர் அதை உறுதி செய்தனர்.
இப்படி ஒரு நிலையில் விவாகரத்துக்கு பின்னர் நாக சைதன்யா - சமந்தா இருவரும் ஒரே இடத்திற்கு வந்துள்ளனர். ராமநாயுடு ஸ்டூடியோவில் இருவருக்கும் படப்பிடிப்பு ஒரே நேரத்தில் இருந்துள்ளது. இருவரும் ஒரே லொகேஷனில் இருந்தாலும் கூட இருவரும் பேசிக்கொள்ளாமல், ஷூட்டிங் முடிந்தபின் அவர்கள் தங்களின் காரில் ஏறி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.