உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புத்தாண்டு கொண்டாட துபாய் பறந்த விக்னேஷ் - நயன்

புத்தாண்டு கொண்டாட துபாய் பறந்த விக்னேஷ் - நயன்

காதல் பறவைகளாக சிறகடித்துப் பறந்த வருகிறார்கள் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும். மேலும் விடுமுறை நாட்களில் இவர்கள் இருவரும் இணைந்து வழிபாட்டு தளங்களுக்கும், வெளிநாட்டு சுற்றுலா தளங்களுக்கும் சென்று வருவதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர். அந்தவகையில் வரும் புத்தாண்டை கொண்டாடு விதமாக துபாய்க்கு கிளம்பி சென்றுள்ளனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும்.

இவர்கள் தயாரிப்பில் உருவான ராக்கி படம் கடந்த வாரம் வெளியாகி பாராட்டுக்களை பெற்றுள்ளது. இந்தப்படத்தை இருவரும் ஜோடியாக சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றில் பார்த்து ரசித்துவிட்டு அப்படியே துபாய் கிளாம்பி சென்றுள்ளனர். இன்னொரு பக்கம் விக்னேஷ் சிவன் இயக்கிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பும் முடிவடைந்தது விட்டது. இந்த சந்தோஷத்துடன் வரும் புத்தாண்டை துபாயில் கொண்டாட தயாராகி விட்டது இந்த ஜோடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !