அப்பாட.... ரிலீஸ் ஆகிறது ஐங்கரன்
ADDED : 1473 days ago
அதர்வா நடித்த ஈட்டி படத்தை இயக்கிய ரவி அரசு அதற்கு பிறகு இயக்கிய படம் தான் ஐங்கரன். 2018ம் ஆண்டே தயாராகிவிட்ட இந்த படம் 3 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவருகிறது. இந்த படத்தில் ஜிவி பிரகாஷ், மஹிமா நம்பியார், காளி வெங்கட் , ஆடுகளம் நரேன், அருள்தாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். வருகிற ஜனவரி 26ம் தேதி இந்த படம் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. நீண்டகாலமாக கிடப்பில் இருந்த ஜிவி பிரகாஷின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருவது அவருடைய ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.